இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாளாந்த நாணய மாற்று வீதத்துக்கு எதிராக அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (27) 47 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி இன்று (27) அறிவித்த நாளாந்த நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.22 ரூபாவாகவும் கொள்வனவு விலை 354.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.