ஜப்பானில் 10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்ற மருத்துவர் – மருத்துவமனை அதிரடி நடவடிக்கை..!!

10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்ற மருத்துவர் கோடீஸ்வரரான நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் ஒன்று ஜப்பானில் நடந்தேறியுள்ளது.

அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த சந்தேக நபரான் மருத்துவர் ,மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்தது.

இந்நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்தது. இதன்போது மருத்துவரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறைபாட்டை அடுத்து மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - மதுரையில் நடத்த விஜய் திட்டம்?

Fri May 10 , 2024
இந்தியா: தமிழ்நாடு நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்தான் ஒரே இலக்கு எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். மேலும், 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கவனம் செலுத்திவந்தார். மக்களவைத் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu