ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் உரப்பிரச்சினையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய நிலையில் சிறுபோகத்திற்கு தேவையான 65,000 மெற்றிக்தொன் உரத்தை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக மோடி தெரிவித்திருந்தார்.
எனினும் பின் ரணில் பிரதமராகப் பதவியேற்றவுடன் இது ஐ.தே.க.வினதும் பிரதமரின் வேலையால் இந்தியா 65,000 மெட்ரிக் தொன் வழங்க தீர்மானித்துள்ளதாக ரணில் தரப்பும் ஊடகங்கள் மூலம் பெரும் விளம்பரம் கொடுக்க முனைந்ததால் இது யார் பேசி உரம் வருகுது என முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட அதிகாரிகளை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடினார்.
- எனினும், இச்சந்திப்பில் பிரதமர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை.