ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த வாரம் முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அரசாங்கத்திடம் இருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மறுபுறம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.

மேலும், அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

80 இலட்சம் பெறுமதியான இரத்தினக்கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது..!!

Sun Jun 2 , 2024
80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை சட்டவிரோதமான முறையில் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று முன்தினம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியை சேர்ந்த 53 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு செல்வதற்காக எயார் ஏசியா விமானமான […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu