ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானம்…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் தம்மிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் இது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்க உள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் (SLFP) மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பலர் என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.

பெளத்த தேரர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து நன்றாக சிந்தித்து எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன்.

நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் தேர்தல் வித்தியாசமானது தீர்மானம்மிக்கது” எனவும் தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் கன மழை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!

Wed Apr 17 , 2024
ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மோசமடைந்துள்ள காலநிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தொடரும் கன மழையுடனான காலநிலையால் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளில் செம்மஞ்சள் எச்சரிக்கையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu