சூரியின் ‘கருடன்’ 12 நாட்களில் ரூ.40 கோடி வசூல்…!!

சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடி வசூலை எட்டியுள்ளது. 12 நாட்களில் ரூ.40 கோடியை வசூலித்துள்ள இப்படம் விரைவில் ரூ.50 கோடியை நெருங்கும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

GOAT படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இவ்வளவு நேரம் வருகிறதா? - விஜய பிரபாகரன் சொன்ன தகவல்..!!

Thu Jun 13 , 2024
நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தினை பற்றியும் பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கிறது. படத்தில் விஜய்யும் விஜய்யும் மோதும் காட்சி ஒன்று இருக்கிறது என தகவல் வெளியானது. படத்தில் முக்கிய காட்சியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருக்கின்றனர். அதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஏற்கனவே பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார். […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu