சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி…!!

இலங்கை

மே மாதம் 1 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 46,042 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பருவ காலம் நிறைவடைந்தமையினால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரையில் மொத்தமாக 830, 693 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, முதல் இரண்டு மாதங்களில் நாளாந்தம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,000க்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 3,800 ஆக குறைந்துள்ளது.

இதேவேளை, வாராந்த நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 26,000 ஆகக் குறைந்துள்ளது. நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடுகளின் பட்டடியலிலும் மே மாதம் மாற்றம் காணப்பட்டுள்ளது.

பட்டியலில் ஒரு மாதத்தில் 23 சதவீதமான சுற்றுலா பயணிகள் வருகையுடன் இந்தியா முதலிடத்திலுள்ளது. 11 சதவீதமான சுற்றுலா பயணிகள் வருகையுடன் மாலைத்தீவு இரண்டாம் இடத்திலும், 7 சதவீதமானவர்களின் வருகையுடன் சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதேவேளை, அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகையை கொண்ட பிரித்தானியா மற்றும் ரஷ்யா நான்காவது ஐந்தாவது இடங்களுக்கு சரிந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விஜய் சேதுபதியின் புதிய படம் ‘ACE’ - முதல் தோற்றம் வெளியீடு..!!

Sat May 18 , 2024
விஜய் சேதுபதியின் 50ஆவது படம் ‘மகாராஜா’. இந்தப் படம் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மேலும் இதன் ரிலீஸ் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘ACE’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ பட இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார். கன்னடத்தில் வெளியான ‘Sapta Saagaradaache Ello’ படத்தின் மூலம் கவனம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu