அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டின் சுகாதார துறைக்கு வழங்கவுள்ளது.
இதில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றும் தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் நன்கொடையாக வழங்கப்படும்