சீரற்ற வானிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 7 மாவட்டங்களில் 19,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 4,786 ஆகும்.

மேலும், 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 37 குடும்பங்களைச் சேர்ந்த 1,140 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் கடும் மழை காரணமாக பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்..!!

Mon May 20 , 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது நாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்பு மரபு என்றென்றும் நினைவுகூரப்படட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu