சீனாவில் பாரிய மண்சரிவு – 19 பேர் பலி…!!

சீனாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மீஜௌ நகரத்திற்கும் டபு நகரத்திற்கும் இடையேயான வீதியின் ஒரு பகுதியிலேயே நேற்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கிய நிலையில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 30 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ சுமார் 500 பேர் அடங்கிய குழு அங்கே முகாமிட்டுள்ளதுடன், வழக்கமான பாதுகாப்பு, அவசர கால தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோருடன் சுரங்க மீட்பு குழுவினரும் அதில் அடங்கியுள்ளனர்.

தென் சீனாவின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தொழில்துறை ஆற்றல் மையமான இந்த பிராந்தியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்...!!

Thu May 2 , 2024
பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். பிரபல பாடகி உமா ரமணன், சென்னை – அடையாரில் அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35 வருடங்களுக்கு அதிகமான காலம் இசைத் துறையில் பயணித்துள்ளார். 1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu