நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக சீனாவிடம் மேலதிக உதவிகளை நாடுவதால், இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வாரம் பினான்சியல் ரைம்ஸுக்கு அளித்த பேட்டியில், சீனாவின் கூடுதல் நிதி இந்தியாவுடனான உறவுகளை சிக்கலாக்கும் என்ற கவலையை நிராகரித்தார்.
அண்டை நாடான இந்தியா நாட்டிற்கு நிதி உதவியுடன் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது மேலும் மிகவும் தேவையான கடன் திட்டத்தை எளிதாக்க சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேசிவருகிறது. 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன் , பரிமாற்றங்கள் மற்றும் பிற உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
மேலதிக நிதியுதவிக்கு இலங்கை ஜப்பான் மற்றும் சீனாவுடனான தனது உறவுகளை நம்பியிருக்க வேண்டும் என்றார்.
“இந்தியாவுடன் நாங்கள் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளோம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க நாங்கள் எதையும் செய்யாது நாங்கள் இணைந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.
இலங்கைக்கு உதவி மற்றும் மேலதிக கடன்களை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. அது சில நூறு மில்லியன் டொலர்களாக இருக்கும். அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள், உரங்கள் உட்பட சில பொருட்கள் குறித்து நிதி அமைச்சு விவாதித்து வருகிறது,” என்று அவர் பேட்டியில் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கு, பொதுச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.