சிகிரியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சிகிரியா பாதுகாவலர் என கூறப்படும் ஒருவர் திட்டி தாக்கியுள்ளார்.
இதன்போது அவர் தரையில் விழுந்து இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் தனது கையடக்கத் தொலைபேசியில் சிகிரிய ஓவியங்களை புகைப்படங்களை எடுத்த போதே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சிகிரிய சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.