சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவது எளிதல்ல- ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாது. பணத்தைப் பெறுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் தேவை. அதைச் செய்ய நிறைய வேலைகள் தேவைப்படும்.

அதாவது நிதி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எளிமையாகச் சொன்னால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கடன்களை மறுசீரமைக்கும் ஒரு நேர்மறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அது எளிதானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thedal Media Editor

Next Post

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ள யூரியா ஜூலை மாதம் நாட்டை வந்தடையும்

Mon Jun 13 , 2022
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி அல்லது 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி ஓமானில் இருந்து புறப்பட உள்ளது. கிடைக்கும் உரம் ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். யூரியா உர மூட்டை சுமார் 10,000 […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu