சர்வதேச இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு..!!

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான சர்வதேச இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆறு பிரிவுகளின் கீழ் 41 வீரர்கள் புதிய ஒப்பந்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 100% உயர்த்தப்பட்டு, அவர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

மேலும், ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சமநிலை அல்லது தோல்வி என்பதைப் பொறுத்து கட்டண முறைகள் மாறுபடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான கொடுப்பனவும் 25 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை அமைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதலீட்டு இலக்கை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் - திலும் அமுணுகம..!!

Sat May 11 , 2024
நிதி அமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் எனும் முதலீட்டு இலக்கை இவ்வாண்டு இறுதிக்குள் 3 மடங்காக அதிகரிக்க முடியுமென ராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200 சதவீதத்தால் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரதன்மை, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu