சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன்…!!

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 10.3 ஓவர்களில் இலக்கை கடந்து கொல்கத்தா அணி அசத்தியது.

சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ஓட்டங்களை எடுத்தது. 114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் நரைனை 6 ஓட்டங்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ்.

அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் இணைந்து ஓட்டங்களை குவித்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். அதன் பலனாக பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

10.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கையும் எட்டி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2014 இல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினர். அபிஷேக், 2 ஓட்டங்களில் வெளியேறினார். முதல் பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஹெட் வெளியேறினார். தொடர்ந்து ராகுல் திரிபாதியும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது அந்த அணி.

நிதிஷ் ரெட்டி, மார்க்ரம், ஷாபாஸ் அகமது, அப்துல் சமாத், கிளாசன் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. 18.3 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா சீனா அமெரிக்கா பிரான்ஸ் போட்டி..!!

Mon May 27 , 2024
இலங்கையின் மூலோபாய வளங்கள் சொத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதற்கான மற்றுமொரு உதாரணங்களாக இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா சீனா பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புவியியல் மற்றும் சுரங்க […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu