சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது

  1. நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இயந்திர படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரும் தற்பொழுது அம்பாறை பாணமை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டனர். இதன்போது, அதில் இருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர் .

Thedal Media Editor

Next Post

சீன தலைநகரில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம்

Sun Jun 12 , 2022
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. நாட்டில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகி வந்தது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பீஜிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் பீஜிங்கில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu