கொழும்பு மாநாகர சபை எல்லைக்குள் முறிந்து விழும் அபாய நிலையில் 200 மரங்கள்..!!

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு பிரதேசத்தில் பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் 50 வருடங்கள் முதல் 150 வருடங்கள் வரை பழமையான மேலும் 200 மரங்கள் முறிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதுவரை சரிந்து வீழ்ந்துள்ள பெரும்பாலான மரங்கள் ஆபத்தான நிலையில் இருக்கவில்லை என்றும் 50 முதல் 150 வருடங்கள் பழமையான சுமார் 200 மரங்கள் ஆபத்தான நிலையில் தற்போது காணப்படுகின்றமை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அவற்றில் பல மரங்கள் மண் அரிப்பு காரணமாக விழும் அபாயத்தில் உள்ளதாகவும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டு ஏனைய மரங்களின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக கொழும்பு மாநகர பகுதிக்குள் 50 மரங்கள் இதுவரை சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கொழும்பு மாநகர சபை எவ்வாறாயினும், வீழ்ந்துள்ள மரங்கள் எதுவும் முன்னர் இனங்காணப்பட்ட அபாயகரமான நிலையில் இருந்த மரங்கள் அல்ல என்றும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...!!

Mon May 27 , 2024
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 02 எச்சரிக்கை விடுக்கப்பட்டது: • கொழும்பு – சீதாவக பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu