பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்த ஹைதராபாத்தில் உள்ள சிறுவன் ஒருவன் படத்தில் இடம்பெற்றுள்ள யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சியால் ஈர்க்கப்பட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை தொடர்ச்சியாக ஒரே மூச்சில் புகைத்துள்ளான்.
இதன் விளைவாக சிறுவனுக்கு கடுமையான தொண்டைவலியும் இருமலும் ஏற்பட்டுள்ளது.
பிறகு ஹைதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் சிறுவன் குணமடைந்துள்ளான்.
பிறகு அச்சிறுவனுக்கு முறையாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.