குற்றம் குற்றமே – பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு நீதிமன்றம் அளித்த வினோத தண்டனை..!!!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு நீதிமன்றம் வினோத தண்டனை அளித்த சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் ஆக்ரோஷத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின் என்ற 45 வயது பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது.

இதில் நெஞ்சு எலும்பு முறிவடைந்துஎ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான அந்த ஆட்டை தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர் தெற்கு சூடான் காவல் துறையினர்.

கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த இச்சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாயில்லா ஜீவனாக இருந்தாலும், தப்பு தப்புதான் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இங்கோ, உரிமையாளர் நிரபராதி என்றும், இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தற்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது.

ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனை கிடையாதா என்றால், ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய நீதிமன்றம் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசுமாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Thedal Media Editor

Next Post

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

Sun May 29 , 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பயணிக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதனால் உச்சபட்ச பாதுகாப்பை வழங்குவது காலக்கெடுவாகும். […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu