குருந்தூர் மலையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை – ஜனாதிபதி செயலகம்
குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணியை ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர், தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.
கடந்த 8ம் திகதி கூட்டமைப்புடன் இனைந்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் முரன்பட்டுக்கொண்டதுடன் குருந்தூர் மலையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என ஐனாதிபதி தெரிவித்திருந்தார்.
அக் காணொளி தொடர்பாக “எல்லாவல மேதானந்த தேரர்” உத்தியோகபூர்வ கடிதம் மூலம் கேள்வி எழுப்பியதற்கு அமைவாகவே ஜனாதிபதி செயலகம் மேற்கண்டவாறு பதில் தெரிவித்துள்ளது.