குட் பேட் அக்லியில் பல வேடங்களில் நடிக்கும் அஜித் – ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியிலேயே அசர்பைஜானில் துவங்கிய சூழலில் பல்வேறு காரணங்களால் படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாகவும் மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் அஜித் இணையுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

ஜூன் மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதத்திலேயே ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாகவும் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் சூட்டில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் அல்லது மீனா இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவருமே முன்னதாக அஜித்துடன் ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் தற்போது இவர்களில் ஒருவர் குட் பேட் அக்லி படத்தில் ஜோடியாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட அரிய சத்திரசிகிச்சை...!!

Tue Apr 30 , 2024
இலங்கை இலங்கையில் முதன்முறையாக ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu