கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை….!!

அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கியூபாவின் முழு ஒத்துழைப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும். அதேநேரம் கியூபாவை நியாயமற்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இதேவேளை கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் இலங்கையின் பல்வேறு அமைப்புகள் உலகளாவிய கோரிக்கையுடன் இணைந்து கியூபாவை அநீதியான பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

மேலும், இலங்கையின் இடது ஜனநாயக முன்னணி மற்றும் இலங்கை – கியூபா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கம் ஆகியவையும் அமெரிக்க அரசாங்கம் கியூபாவிற்கு எதிராக கடைப்பிடித்து வரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகில் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி? - வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

Fri May 24 , 2024
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அக்கடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu