காதலை நிராகரித்தமையும் குடும்ப பிரச்சினை மாணவியின் கொலைக்கு காரணம்

துளை – ஹாலிஎல – உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் நேற்றைய தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த மாணவி வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதமொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்திருந்தனர்

மேலும்,சந்தேகநபரின் காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த கொலை விவகாரம் குறித்து தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய தர்மராஜா நித்தியா என்ற இம்மாணவி ஹாலி-எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

குறித்த மாணவியை, அதே தோட்டத்தைச் சேர்ந்த இராமையா திபாகரன் என்ற 32 வயது இளைஞன் காதலித்து வந்துள்ளார். இக்காதலை அம்மாணவி நிராகரித்ததினால், ஆத்திரம் கொண்ட இளைஞன் கோடரியினால் தாக்கி கொலை செய்துள்ளமையும், நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கிடையில் தகராறுகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி, கல்வித்துறையில் சிறந்து விளங்கியவரென்று, அம்மாணவி கல்வி கற்று வந்த பாடசாலை ஆசிரியர் சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தர்மராஜா நித்யா என்ற மாணவி வழமை போன்று பெற்றோரை விழுந்து வணங்கி காலை பாடசாலைக்கு வந்து, கற்கை கடமைகளை முறையாக மேற்கொண்டு, மாலை வீடு திரும்பும் போதே, மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவியிடம் பல வருடங்களாக காதல் கோரிக்கை விடுத்த சந்தேகநபரை மாணவியின் தாயாரின் எதிர்ப்பால் தாயையும், மாணவியின் சகோதரனையும் கோடரியால் தாக்கியுள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களாக மாணவியின் பெற்றோர் வறுமை நிலையையும் மாணவியை கல்வி கற்க வைத்ததாகவும்,மாணவி மீது எந்தவொரு தவறையும் தாம் காணவில்லையென்றும், அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பேசி, அனைவரது ஆதரவையும் பெற்று வந்தவரென்றும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையை அடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Next Post

லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது

Thu Mar 10 , 2022
லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை உயர்வானது, இன்று (11) […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu