கவனம் ஈர்க்கும் இளையராஜா பயோபிக் படத்தின் புதிய போஸ்டர்..!!

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இளையராஜா பயோபிக் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் ஹார்மோனியப்பெட்டியுடன் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஒரு இளைஞர் இசை கச்சேரி நடத்துவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் பிரதமராகும் மோடி..!!

Tue Jun 4 , 2024
வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu