“கதைகளைப் புனைவது வருத்தமளிக்கிறது” – சைந்தவி வேதனை..!!

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சில யூடியூப் மற்றும் செய்தி நிறுவனங்களில் தவறான தகவல்கள் பரப்பபட்டதற்கு எதிராக இருவரும் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் “தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளைப் புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது” என சைந்தவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.

எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் நிகழ்ந்தது அல்ல. மேலும் ஆதாரமற்ற முறையில் ஒருவரை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு.நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருட நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், “தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தைவான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரம் - வெளியான பரபரப்பு வீடியோ..!!

Sat May 18 , 2024
தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் நாடாளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu