கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு – வெளிவரும் பல தகவல்கள்

கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே இன்றையதினம் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மாணவி காணாமல் போன விடயம் தொடர்பாக கடந்த 07-06-2024ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் இராட்சத பலூன்கள் - தென்கொரியாவிற்கு வடகொரியா எச்சரிக்கை...!!

Mon Jun 10 , 2024
வடகொரியா தலைவருக்கு எதிராக 2 இலட்சம் துண்டு பிரசுரங்களை தென்கொரியா பலூன்களில் பறக்க விட்டதற்கு பதிலடியாக மீண்டும் பலூன்களை பறக்க விட உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தென்கொரிய எல்லைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக தென்கொரியாவுக்குள் நூற்றுக்கணக்கான இராட்சத பலூன்களை வடகொரியா பறக்க விட்டதோடு, அந்த பலூன்களில் சிகரெட் துண்டுகள், பேட்டரி துண்டுகள் போன்ற குப்பைகள் இருந்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த தென்கொரியா […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu