கட்டுநாயக்கவில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இந்த சிகரெட்டுகளை துபாயிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 கோடி பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் விமான நிலையத்தில் இளைஞரொருவர் கைது...!

Thu May 9 , 2024
05 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சா போதைப் பொருளுடன் தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இளைஞரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று புதன்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய ஹோமாகமவைச் சேர்ந்த தொழில்முறை நடனக் கலைஞரான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்த சந்தேக நபர் தனது பயணப் பையில் மிகவும் சூட்டுமமானமுறையில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu