கடுமையான தாக்குதலுக்குள்ளான சிறுமி தொடர்பில் வெளியான தகவல்..!!

திருகோணமலையில் சிறுமியை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாய், சித்தப்பா, பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த எனும் நபரும் மற்றுமொரு சந்தேகநபரும் இன்று அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாயை உளநல வைத்தியர் ஒருவரிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிறுமியை அனுராதபுரம் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாடசாலைகள் முடங்கும் அபாயம் - வெளியான காரணம்..!!

Thu Jun 6 , 2024
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலனுக்கும் நிதியமைச்சில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாததையடுத்து, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu