ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி – மஹியங்கனையில் சம்பவம்

மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 45 வயதான தந்தை மற்றும் 15,10 வயது இரு மகன்கள் ஆவர்.

ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல் தம்பராவ குளத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடி பார்த்ததில் அவர்கள் குளிப்பதற்கு சென்ற இடத்தில் உடைகள் மற்றும் காலணிகள் மட்டும் காணப்பட்டுள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் நீரில் மூழ்கியவர்களை மீட்டு மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thedal Media Editor

Next Post

மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசினால் 15,000 லிற்றர் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு

Thu May 26 , 2022
மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசினால் 15,000 லிற்றர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு பகுதி மீனவர்களுக்கும் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும். மீனவர் சங்கங்கள், கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இது பகிரப்படும். சுமார் 705 மீனவர்கள் இந்த நன்மையைப் பெறவுள்ளனர் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

You May Like