ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாட்டில் நுகர்வுக்காக அரிசி இருப்புக்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலைமை காரணமாக ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்தில் நாட்டில் போதியளவு நெல் அறுவடை இன்மை நெற்செய்கையின் ஆரம்பம் குறைந்த மட்டத்தில் உள்ளதே காரணமாகும். அத்துடன் இரசாயன உரம் வழங்கப்படாமையால் பெரும்போகத்தில் நெல் அறுவடை 50 வீதமாக குறைந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த நெல் அறுவடை எதிர்வரும் ஓராண்டு காலத்தில் இன்னும் குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.