ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு விற்ற பெண் கைது

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.

பெற்றோல் போத்தல் ஒன்றை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீட்டை சோதனை செய்து பெண்ணை கைது செய்ததுடன் பெற்றோல் கையிருப்பையும் பறிமுதல் செய்ததாக பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார தெரிவித்தார்.

Thedal Media Editor

Next Post

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை..!

Sun May 29 , 2022
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் ​போயுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சமயத்தில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu