எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் – புதிய விதிமுறைகளை உருவாக்கும் அரசாங்கம்..!!

எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உடன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனிசியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன், அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தற்போது புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் - எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Wed May 22 , 2024
ஈரானில் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடைந்தமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஜனாதிபதி ரைசியின் மரணம், அவரது இடத்திற்கான போட்டியை அதிகார மையத்தில் உருவாக்கும் என்றே நிபுணர்கள் தரப்பின் கணிப்பாக உள்ளது. அப்படி ஒரு நிலை உருவானால், அது நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu