அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த இருவர் எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 52 வயதுடைய பெண் ஒருவரும் 65 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோதனையில் 42 லீற்றர் பெற்றோல், 28 லீற்றர் டீசல் மற்றும் 242 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இருவரும் இன்று எம்பிலிப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.