“என் அனுமதியை இன்றி என்னை பெற்றெடுத்துள்ளார்கள்” – பெற்றோர் மீது வழக்கு தொடுத்த பெண்…!!

என்னுடைய அனுமதியை பெறாமலும், என்னை தொடர்பு கொள்ளாமலும் என்னை பெற்றெடுத்துள்ளார்கள் என்று பெற்றோர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் அறியப்படுவார். இவர், தன்னுடைய அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோர் மீது வழக்கு தொடுத்த சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தியாஸ் பேசிய வீடியோவில், “நான் இங்கு இருப்பதற்கு விரும்புகிறேனா, இல்லையா என்று நான் பிறப்பதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், என் பெற்றோர்கள் அவ்வாறு செய்யவில்லை, அதற்கு முயற்சிக்கவும் இல்லை. எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்றெடுத்ததற்கு பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்காமல், தத்தெடுத்துள்ளேன். அவர்கள் இங்கு இருப்பது என் தவறல்ல. அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்சி செய்வேன்.

நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால் மனநல மருத்துவரை சந்தித்து, குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்டறிய வேண்டும்.

என்னுடைய பெற்றோர்கள் அப்படி செய்யாததால் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன் பெற்றோருக்கு எதிராக குழந்தைகள் வழக்குத் தொடர கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

GOAT படத்தில் விஜயகாந்த் இடம்பெறும் காட்சிகளை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த் - என்ன சொன்னார் தெரியுமா ?

Wed May 15 , 2024
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் GOAT . ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகின்றது. GOAT திரைப்படம் உலகத்தரத்தில் உருவாகியிருப்பதால் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்க சற்று தாமதமாகும் என தகவல்கள் வந்தன. இதன் காரணமாகவே ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu