எனது மகனை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – தர்மசங்கடமான நிலையில் ஜோ பைடன்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார்.

மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.

இதுதொடர்பாக அவர் பொலிஸுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

போதைப்பழக்கத்துக்கு அடிமையான ஜனாதிபதிக்கு மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.

இதன்படி, அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நான் ஜனாதியாக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பாதுகாப்புத் துறை பெண் மீது வழக்கு தாக்கல்...!!

Sat Jun 8 , 2024
பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பாதுகாப்புத் துறை பெண் மீது இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பிற்பகல் கங்கனா ரனாவத் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது. அப்போது நடிகையிடம் வழக்கமான சோதனைகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பணியிலிருந்த பாதுகாப்புப்படை பெண் குல்விந்தர் கவுர், கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu