எனக்கு கிடைத்த கௌரவம் – ’இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்..!!

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட சுயாதீன இசை ஆல்பம் ‘இனிமேல்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெகாயிட்’ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2′ பாடல் வெளியீட்டு விழாவில், அவர் தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட் பாடல்களைத் தொகுத்து இசை நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த பெருமை. அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை இணைத்து, மெலடியாக தயாரித்து வழங்க உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன். அவரது அன்பும், ஆதரவும் தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி - ஐசிசியிடம் முறைப்பாடு..!!

Sat Jun 8 , 2024
2024 T20 உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது இலங்கை அணி எதிர்கொண்ட நீண்ட பயண நேர இன்னல்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ICC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அணியின் வசதிகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை கிரிக்கெட் பிரதிநிதியிடம் தனியான விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார். “இலங்கை, அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu