உள்ளுாரட்சி தேர்தல் – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அவற்றின் புதிய பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் அதற்கு முன்வரும் ஆறு மாத காலத்திற்குள் உள்ள திகதி ஒன்றில் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் 20 க்கும் 2023 மார்ச் 20 க்கு இடைப்பட்ட திகதி ஒன்றில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் நடப்பு பொருளாதார நெருக்கடிக்குள் இது சாத்தியமா? என்பதை அவர் கூறவில்லை.

உள்ளுாராட்சி தேர்தலை ஒத்திவைக்கபோவதில்லை என்று முன்னதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும் தேர்தல்களை நடத்த இது உகந்த காலம் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றமை குறிப்பி்டத்தக்கது.

Thedal Media Editor

Next Post

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

Mon Jun 13 , 2022
நாட்டில் தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத காரணத்தினால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதன்படி இன்றுடன் சேர்த்து குறித்த கப்பலுக்கு 06 நாட்கள் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

You May Like