உலகிலேயே மிக பெரிய விமான நிலையத்தை அமைக்க தயாராகும் துபாய்….!!

துபாயில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமான நிலையம் தொடர்பில் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளதாவது,

“தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட புதிதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் உலகின் மிக பெரிய விமான நிலையமாக அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் புதிய விமான நிலையமானது 35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்படவுள்ளதுடன் தற்போதைய சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக அமைக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகள் அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் சுமார் 260 மில்லியன் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக புதிய விமான நிலையம் அமையவுள்ளது. துபாய் விமான போக்குவரத்து துறை முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.

மேலும் புதிய விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படவுள்ளதுடன் புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குட் பேட் அக்லியில் பல வேடங்களில் நடிக்கும் அஜித் - ஹீரோயின் யார் தெரியுமா?

Mon Apr 29 , 2024
நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியிலேயே அசர்பைஜானில் துவங்கிய சூழலில் பல்வேறு காரணங்களால் படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாகவும் மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பதில் பல்வேறு கருத்துகள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu