உயிருடன் இருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸிற்கு இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் – வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நியூசிலாந்து ஹெரால்டின் அறிக்கையின்படி, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செயற்பாடுகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அரச குடும்மத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. “எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், ஆனால் மன்னரின் உடல்நிலை உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது” என அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஹெரால்டிடம் கூறியுள்ளார்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உதவியாளர்கள், “Operation Menai Bridge” எனப்படும் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் அவரது அதிகாரப்பூர்வ பணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 8, 2022 அன்று ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னரின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து “Operation Menai Bridge” அடிக்கடி புதுப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு “Operation London Bridge” என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் முதல் பொதுப் பணிகளில் மன்னர் ஈடுபடுவார் என கடந்த வாரம் பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரம்மாண்ட பட்ஜெட் - ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள்...!!

Mon Apr 29 , 2024
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இப்படம் பான் இந்தியா […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu