இலங்கை வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை..!!

இலங்கை

இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என உலக வங்கியின் முன்னாள் செயல் தலைவர் சாந்த தேவராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளிலிருந்து பிரித்தால் அதிக கடன் செலவில் சிக்கித் தவிக்கும் அதே தவறுகள் மீண்டும் இடம்பெறாது.

இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினையில், நாட்டின் மெத்தனப் போக்கு காரணமாக அமெரிக்கா (US) மற்றும் ஜப்பான் (Japan) போன்ற நாடுகளின் சாதகமான கடன்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கு பதிலாக சீனாவிடமிருந்து வணிகக் கடன்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 2019ஆம் ஆண்டு அரசாங்கம் முடிவெடுத்தது. இருப்பினும், இந்த பயனற்ற செயல் நாட்டை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை பொருளாதாரக் கொள்கை நோக்கங்களுடன் கலந்துள்ளது.

இந்நிலையில், நாடுகளுடன் உள்ள உறவுகளைப் பொருட்படுத்தாமல், மலிவான கடன் வழங்குபவரிடம் இலங்கை எப்போதும் கடன் வாங்கியுள்ளது. எனவே, இலங்கை தனது கடன் கொள்கையை அதன் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து பிரித்து வைத்திருக்க வேண்டும்.

மேலும், பிரிவினையை உருவாக்குவது சாத்தியமற்றது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தைவான் மற்றும் சீனாவைப் போல இது சாத்தியம். தைவானும் சீனாவும் பரம எதிரி நாடுகளாகும்.

எனினும், சீனா, தைவானின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும், மிகப்பெரிய முதலீட்டு இடமாகவும் உள்ளது. எனவே, பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், அவர்கள் உறவை தொடர்கிறார்கள. இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டியது.

ஏனெனில், இது அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறைகளின் போது நேரடியாக நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதைத் தடுக்கிறது. அதேவேளை, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவத்தில் உத்தியோகபூர்வ கடனாளிகளிடமிருந்து தனியார் பத்திரதாரர்களுக்கு மாறுவது சிறந்த விடயமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜோ பைடனுக்கு மகனால் ஏற்பட்ட தலைகுனிவு - அமெரிக்க வரலாற்றில் முதல் தடவை..!!

Wed Jun 12 , 2024
துப்பாக்கி கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹன்டர் பொய் கூறியமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும், போதைப்பொருளிற்கு அடிமையான வேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. எனினும் தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்ததாகக் கூறியுள்ளார். இந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu