இலங்கை மக்களுக்கு வரி தொடர்பில் வெளியான பேரிடியான தகவல்…!!

இலங்கை

இலங்கையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது…

நாங்கள் நாட்டு மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய மூலங்கள் தொடர்பாக கவனம் செலுத்துகின்றோம்.

இதுவரை நாட்டில் 20 வீதம் நேரடி வரிகளும் 80 வீதம் மறைமுக வரிகளும் நடைமுறையில் இருந்தன. இன்று நேரடி வரியை 30 வீதமாகவும் மறைமுக வரியை 70 வீதமாகவும் மாற்றியிருக்கிறோம்.

எதிர்காலத்தில் நேரடி வரி 40 வீதமாகவும் மறைமுக வரி 60 வீதமாகவும் மாற வேண்டும். நேரடி வரியை அதிகரிக்கும் போது மூளைசாலிகளின் வெளியேற்றம் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

அப்படி ஒரு சிக்கலும் உண்டு. அதனால்தான் நாங்கள் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இலங்கையில் மறைக்கப்பட்ட பல சொத்துக்கள் காணப்படுகின்றன. எனவே சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அவற்றை செயற்றிறனாக்க முடியும். சொத்து வரி என்தும் மக்கள் பயப்படுவார்கள். மக்களுக்கு சுமை ஏற்படும் வகையில் நாம் அதனைச் செய்யமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இப்படியும் டி.வி வாங்க முடியுமா? - ஆச்சரியப்படுத்திய டிக் டொக் பிரபலம்..!!

Mon Apr 29 , 2024
சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை வைத்து டிக் டொக் பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி வாங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு அவர் டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 முதல் 263 டொலரை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu