இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்..!!

இலங்கை

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன. இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்புளூயன்சா A முதன்மையானது. இருப்பினும், இன்புளூயன்சா B யும் பரவலாக உள்ளது. இந்த நிலைமையின் இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது.

இன்புளூயன்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வடகொரிய மக்களுக்கு விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்...!!

Tue May 14 , 2024
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர். அந்தவகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரிய ஆட்சி சிவப்பு உதட்டுச்சாயம் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமான ஃபேஷனையும் தடை செய்ய சட்டங்களை இயற்றியதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தை மீறும் பெண்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu