இலங்கை குறித்து பாரிஸ்கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

கடன் வழங்கும் முக்கிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிஸ்கிளப் உடன் இலங்கை குறித்து பிரிட்டன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

வெளிநாடு பொதுநலவாயம் நாடாளுமன்ற விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுப்பாதுகாப்பு வாழ்வாதாரம் உட்பட இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அமைதியான ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் உலக வங்கி 600மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகவங்கிக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு பிரிட்டன் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் நிதி நிலைமை குறித்து பிரிட்டன் சர்வதேச நிதி அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை பேண்தகுநிலைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் ஆழமானபேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் நீடிக்கலாம்,இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளது இலங்கையின் யோசனைகள் எவையும் இதுவரை உறுப்புநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை அவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட்டவுடன் நாங்கள் அவற்றை ஆராய்வோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான நிதி உதவி குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன -இலங்iயின் கடன் குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளி;ல ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thedal Media Editor

Next Post

21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் முயற்சியில் பசில்

Thu May 26 , 2022
21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார். 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ச பெற்றுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் 21 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனான […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu