இலங்கை இராணுவம் தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள உறுதி..!

இலங்கை

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஜூன் 26 மற்றும் 27ஆம் திகதிகளில், இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தப் பிரச்சினையை விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நிறுவனத்திற்குள் வருபவர்கள் ஆப்பிள் சாதனங்களை கொண்டுவர கூடாது - எலான் மஸ்க் அதிரடி..!!

Wed Jun 12 , 2024
எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறி உள்ளார். ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்த உள்ளதாக அறிவித்தது. குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu