கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது.எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதேநேரம், பரீட்சை நிறைவுறும் வரையில் எரிபொருள் விலையை அதிகரிக்காதிருப்பதுடன், பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினருக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.