இலங்கையில் 8 மில்லியனாக அதிகரித்துள்ள தினசரி முட்டை நுகர்வு…!!

இலங்கையில் தினசரி முட்டை நுகர்வு சுமார் 8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தினசரி முட்டை நுகர்வு 7 மில்லியன் என்று நுகர்வோர் தரவு அறிக்கைகள் குறிப்பிட்டாலும், கடந்த சில மாதங்களில் குறித்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நாளாந்த முட்டை உற்பத்தி சுமார் 6 மில்லியனாக உள்ளதுடன், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையில் சுமார் 2 மில்லியன் முட்டைகளின் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் முட்டை சந்தையில் கேள்வி நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் ஊடாக இலங்கை சந்தையில் முட்டை விலை வேகமாக அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் கோழி குஞ்சுகளின் வருடாந்தத் தேவை 44,000 முட்டைகளால் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் இந்தத் தேவை சுமார் 80,000 ஆக இருந்தது என்றும், இந்த ஆண்டு 122,000 குஞ்சுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து தாய் கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா - நாசா விஞ்ஞானிகள் தகவல்..!!

Wed Jun 12 , 2024
சர்வேதேச விண்வெளி நிலையத்தில் சூப்பர்பக்’ என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாக்டீரியா விண்வெளி வீரர்களது சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. ஜூன் 5 ஆம் திகதி போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu