இலங்கையில் மதுபான பாவனையில் பாரிய வீழ்ச்சி…!!

இலங்கை

கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி, இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்ட காலங்களில் மதுபான பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுபான பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுபான பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.

புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுபான பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுபானத்தின் விலை அதிகரிப்பே காரணம் என, ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகின் ஆபத்தான நாடொன்றிக்கு விஜயம் செய்துள்ள இளவரசர் ஹரி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!

Sun May 12 , 2024
பிரித்தானிய இளவரசர் ஹாரி, மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் நைஜீரியாவுக்கு விஜயம் செய்துள்ளமையானது பிரித்தானிய தரப்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தையும் ஹாரி மற்றும் மேகன் தவிர்க்க வேண்டும் என பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் 12 ஆவது ஆபத்தான நாடக நைஜீரியா, சர்வதேச தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ‘100,000 பேரில் 34 பேர் கொலை விகிதம் மற்றும் கடத்தல்களுக்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu