இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பல சிறுவர்கள் இரவு நேரத்தில் தூக்கமின்றி எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும், கையடக்க தொலைபேசிளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல் சரியாக செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வதாகவும் பெற்றோர்களால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசியமாக இருந்தால் மட்டும் எந்தவொரு சிறுவர்களையும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தாய்வானை உரிமை கொண்டாடும் சீனாவின் அடுத்த நகர்வு; களமிறங்கியுள்ள இராணுவம் - என்ன நடக்கிறது..??

Fri May 24 , 2024
தைவானின், சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இரண்டு நாள் இராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தைவான் ஜலசந்தி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன இராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருவதால் தைவான் அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu