இலங்கையில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!!

புத்தளம், நாகவில்லு பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முயன்ற ஒருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 4 பண்டல்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்படப்பட்டுள்ளன.

புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட சிகரெட் பெட்டி, மோட்டார் சைக்கிளும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மொட்டு கட்சியின் புதிய திட்டம்! அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்...!!

Sun May 5 , 2024
நாடாளுமன்றை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஏற்கனவே ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றை கலைக்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் மட்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. எவ்வாறெனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu