இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனை – கடுமையாக பாதிக்கும் பல்வேறு சிகிச்சைகள்..!!

இலங்கையில் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சுமார் 2000 விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சுகாதார சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை 4000 எனவும், தற்போது 2150 விசேட வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி,

சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை நல வைத்தியர்கள், இரத்தம் ஏற்றும் நிபுணர்கள், பாலியல் நோய் வைத்தியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையினால் இந்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் விசேட வைத்தியர்கள் நாடு திரும்பமாட்டார்கள் எனவும், அவர்களை நாட்டில் தக்கவைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரஷ்யாக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..!!

Mon Jun 10 , 2024
ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்தவொரு தகவலையும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஓய்வுபெற்ற இலங்கை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu